டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உத்தரகாண்ட் முதலமைச்சருக்கு தீவிர சிகிச்சை..!!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உத்தரகாண்ட் மாநில முதல்வர், மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் வூகான் மகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் பரவலுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. அதில், ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளன.

இந்தியாவில், கொரோனா வைரஸால் திரையுலகினர், அரசியல்வாதிகள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் உத்தரகாண்ட் மாநில முதல்வர் திருவேந்திர சிங் ராவத் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கடந்த 18-ம் தேதி அன்று, உத்தரகாண்ட் மாநில முதல்வர் திருவேந்திர சிங் ராவத்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்னும் அவர் பூரணகுணம் அடையாததால், மேல்சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை நடத்தி தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே