நியூசிலாந்துக்கு எதிரான 4ஆவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரில் ஏற்கெனவே நடைபெற்ற 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது.

இந்நிலையில், வெல்லிங்டனில் 2 அணிகளுக்கு இடையேயான 4ஆவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவுக்கு போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.

அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன், கே.எல். ராகுலுடன் களமிறங்கினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே