இந்தியாவில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது – ICMR

இந்தியாவில் மொத்த கொரோனா சோதனை 1 கோடி மாதிரிகளை கடந்துள்ளது. இந்தியாவில் மொத்தமாக 1,00,04,101 மாதிரிகள் இதுவரை கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் மொத்த கொரோனா காரணமாக 700728 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக 255107 பேர் இருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 425817 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இந்தியாவில் மொத்தமாக 19721 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தியாவில் மகாராஷ்டிராவில்தான் அதிகமாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் மொத்தம் 206619 பேர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 8822 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 111151 பேர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 1510 பேர் பலியாகி உள்ளனர்.

டெல்லியில் மொத்தம் 99444 பேர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 3067 பேர் பலியாகி உள்ளனர். குஜராத்தில் மொத்தம் 36123 பேர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 1944 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தியாவில் இத்தனை கேஸ்கள் பரவி உள்ள நிலையில் இந்தியாவில் மொத்த கொரோனா சோதனை 1 கோடியை கடந்துள்ளது.

இந்தியாவில் மொத்தமாக 1,00,04,101 மாதிரிகள் இதுவரை கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

நேற்று மட்டும் 180596 மாதிரிகள் இந்தியாவில் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளனர். இந்தியா முழுக்க 1105 கொரோனா சோதனை மையங்கள் உள்ளது.

இதில் 788 அரசு மற்றும் 317 தனியார் மையங்கள் உள்ளது.

கடந்த 14 நாட்களாக தினமும் இந்தியாவில் 2 லட்சம் சோதனைகள் சராசரியாக செய்யப்படுகிறது.

மகாராஷ்டிராவில் மொத்தம் 11 லட்சம் மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இந்தியாவிலேயே அதிகமாக 14 லட்சம் மாதிரிகள் கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் 6.43 லட்சம் மாதிரிகள் கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது; குஜராத்தில் 4.12 லட்சம் மாதிரிகள் கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே