இந்தியாவின் சூப்பர் ஃபாஸ்ட் முதல்வராக எடப்பாடி பழனிசாமி திகழ்ந்து வருகிறார் – அமைச்சர் விஜயபாஸ்கர் புகழாரம்..!!

சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் அம்மா மினி கிளினிக் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

ஆரம்பகட்ட நோய்களுக்கு சிகிச்சை, மருத்துவ பரிசோதனைகளை மினி கிளினிக்கில் செய்து கொள்ளலாம்.

இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “மருத்துவர்கள் நாடி பிடித்து பார்த்து நோய்களை கண்டறிவது போல நாடியை பிடித்து பார்த்து மக்கள் உணர்வுகளை புரிந்து கொண்டவர் முதலமைச்சர்.

இந்தியாவின் சூப்பர் ஃபாஸ்ட் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி திகழ்ந்து வருகிறார். மக்கள் நலமாக இருக்க வேண்டும் என நினைக்கும் முதல்வர் நூறாண்டு காலம் நலமாக வாழவேண்டும் என்று மக்கள் எண்ணுகிறார்கள். 

முதலமைச்சரை பார்த்து எதிர்க்கட்சி தலைவருக்கு மட்டும் பயமல்ல; கொரோனாவுக்கும் பயம் இரண்டுமே ஒன்றுதான்” எனக் கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே