நியூசிலாந்துக்கு எதிரான 4-வது டி20 தொடர் சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி..!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 4வது டி20 போட்டி சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டி20 போட்டி வெலிங்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் டாடஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்திய அணி தொடரை வென்றுவிட்டதால் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி உள்ளது.

இந்திய அணயில் ரோஹித் சர்மா, முஹமது ஷமிக்கு ஓய்வு வழங்கப்பட்டு சஞ்சு சாம்சன், நவ்தீப் சைனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் இன்றையப் போட்டியில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக இஷ் சோதி கேப்டனாக செயல்பட்டார்.

தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் களமிறங்கினர்.

வாய்ப்புக்காக காத்திருந்த சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவரார் என எதிர்பாபர்க்கப்பட்ட நிலையில் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

அவரை அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 11 ரன்னிலும் ஷ்ரோயஸ் ஐயர் 1 ரன்னிலும் அவுட்டாகி அடுத்த அதிர்ச்சியை கொடுத்தனர்.

மறுமுனையில் அதிரடியாக ஆடி வந்த கே.எல்.ராகுல் 26 பந்துகளில் 2 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் உடன் 39 ரன்கள் விளாசி இஷ் சோதி பந்துவீச்சில் அவுட்டானார்.

ஷிவம் துபே 12 ரன்களில் அவுட்டாக அடுத்துவந்த ஷிவம் துபே டக்அவுட்டாகி வெளியேறினர்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி சார்பில் மனிஷ் பாண்டே 50 ரன்கள் விளாசி கடைசி வரை அவுட்டாகமல் இருந்தார்.

இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.

ஆரம்பமே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

தொடக்க வீரர் குப்தில் பும்ரா பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ராகுலிடம் கேட்ச் கொடுத்து 4 ரன்னில் அவுட்டானார்.

அடுத்து வந்த டிம் சீஃபர்ட் – முன்ரோ ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

நிதானமாக விளையாடிய இந்த ஜோடி 2வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் 74 ரன்களை குவித்தது.

முன்ரோ 47 பந்தில் 64 ரன்கள் விளாசி ரன் அவுட்டாகி வெளியேறினார்.

இவரையடுத்து களமிறங்கிய புருஸ் சஹால் பந்துவீச்சில் டக்அவுட்டாகினர்.

இதனால் நியூசிலாந்து அணி 12.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்திருந்தது.

நியூசிலாந்து அணியின் அனுபவ வீரர் ரோஸ் டெய்லர் 5வது வீரராக களமிறங்கி சிறப்பாக விளையாடினார்.

பரபரப்பாக சென்ற போட்டியில் கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்திலேயே ரோஸ் டெய்லர் அவுட்டானார்.

அடுத்த பந்தில் பவுண்டரி, விக்கெட் என போட்டி பரபரப்பின் உச்சத்திற்கு சென்றது.

கடைசி ஒரு பந்தில் 2 ரன்கள் என்றிருக்க நியூசிலாந்து 1 ரன் மட்டுமே எடுத்தால் இந்தப் போட்டியும் சூப்பர் ஓவருக்கு சென்றது.

இந்திய அணி சார்பில் சூப்பர் ஒவரை பும்ரா வீசினார்.

நியூசிலாந்து அணி சூப்பர் ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 13 ரன்கள் எடுத்தது. சூப்பர் ஓவரில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி, கே.எல்.ராகுல் களமிறங்கினர்.

நியூசிலாந்து அணி சார்பில் சூப்பரை டிம் சௌதி வீசினார்.

முதல் பந்தில் சிக்சர் அடுத்த பந்தில் பவுண்டரி விளாசிய கே.எல்.ராகுல் 3 பந்தில் பவுண்டரி எல்லையில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேறினார்.

4வது பந்தில் கேப்டன் விராட் கோலி 2 ரன்கள் அடித்ததை தொடர்ந்து 2 பந்துகளுக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

5 வது பந்தில் பவுண்டரி விளாசி கேப்டன் விராட் கோலி இந்திய அணியை வெற்றி பெற செய்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே