இந்திய பங்குச் சந்தையில் இன்று சரிவு..!!

அமெரிக்க பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவு மற்றும் ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் சரிவால் இந்திய பங்குச்சந்தைகள் இன்று(செப்., 24) சரிவை சந்தித்தன.

நிப்டி 11 ஆயிரத்திற்கு கீழ் சென்றது.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.30மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 538.02 புள்ளிகள் சரிந்து 37,130.40ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 161.20 புள்ளிகள் சரிந்து 10,970.65ஆகவும் வர்த்தகமாகின.

காலை 11.15 மணியளவில் சென்செக்ஸ் 600 புள்ளிகளும், நிப்டி 218 புள்ளிகளும் சரிந்து வர்த்தகமாகின.

இன்றைய வர்த்தகத்தில் குறிப்பிட்ட சில நிறுவன பங்குகளை தவிர்த்து அநேக நிறுவன பங்குகள் சரிந்து காணப்பட்டன.

அமெரிக்காவின் பொருளாதாரம் அதள பாதாளத்திற்கு செல்வதாகவும், வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு போன்ற பிரச்னைகள் நிலவுவதாலும், இதை மீட்டெடுக்க உடனடி நடவடிக்கை தேவை அந்நாட்டின் பெடரல் வங்கி எச்சரித்தது. 

இதன்காரணமாக அந்நாட்டு பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. இதன் பாதிப்பு ஆசிய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது.

ஜப்பான், ஹாங்காங் உள்ளிட்ட அநேக நாடுகளின் பங்குச்சந்தைகள் சரிந்தன.

மேலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டதாலும் இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிசர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 26 காசுகள் சரிந்து ரூ.73.82ஆக வர்த்தகமானது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே