74-வது சுதந்திர தின விழா நாளை (ஆக.15) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுவதையொட்டி தலைநகர் டில்லியின் முக்கிய கட்டங்களான ராஷ்டிரபதி பவன்,பார்லிமென்ட், இந்தியா கேட் உள்ளிட்ட முக்கிய கட்டடங்கள் மூவர்ண மின் விளக்குகளால் ஜொலித்தன.

இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களிடம் சுதந்திர தின உரைநிகழ்த்தினார்.

நாளை (ஆக.15) நடக்கவுள்ள விழாவில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி சிறப்புரையாற்றுகிறார்.

இதே போன்று பல்வேறு மாநிலங்களில் சட்டசபை , தலைமை செயலகங்கள், கவர்ன மாளிகை கட்டடங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன.