தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7000ஐ கடந்துள்ளது. அதில் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். சென்னையில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3800ஐ எட்டியுள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு பெருமளவு உயர்ந்ததன் முக்கிய காரணம் கோயம்பேடு சந்தையில் கொரோனா வைரஸ் பரவியது தான்.
கோயம்பேடு மார்க்கெட் மூலமாக மட்டுமே 2000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மண்டலவாரியான விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதில், ராயபுரத்தில் 676 பேரும் , தண்டையார்பேட்டையில் 274 பேரும் , திரு.வி.க நகரில் 556 பேரும் , அண்ணா நகரில் 301 பேரும் , தேனாம்பேட்டையில் 412 பேரும் , கோடம்பாக்கத்தில் 630 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் மொத்தமாக 3839 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.