சதுரகிரிக்கு வந்த 4 பக்தர்களுக்கு கொரோனா..!!

கடந்த வியாழக்கிழமை சதுரகிரி மலைக்கு சென்றவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கிறது பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை என்னும் மகாலிங்கமலை.

இங்கு பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி என மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

அடர்ந்த காட்டுப் பகுதியில் இந்த மலை அமைந்திருப்பதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்.17ம் தேதி மகாளய அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் சதுரகிரிமலையில் குவிந்து, சாமி தரிசனம் செய்தனர். 

அமாவாசையன்று நள்ளிரவில் இருந்த மலைக்கு செல்ல முயன்ற மக்களை, வனத்துறையினர் காலை தான் தரிசனம் செய்ய அனுமதித்தனர்.

அன்று மட்டும் மொத்தமாக 10.800 பேர் தரிசனம் செய்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் சதுரகிரி மலைக்கு சென்ற 4 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதனால், சதுரகிரி மலைக்கு சென்றவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே