PAUL HARRIS FELLOW விருது பற்றிய சிறு தொகுப்பு….

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க அமைப்பு ஒன்று ‘PAUL HARRIS FELLOW’ என்ற அங்கீகாரத்தை வழங்கி கௌரவித்துள்ளது.

குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு போன்ற துறைகளில் சிறப்பாக பணியாற்றியதை பாராட்டி இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் `The Rotary Foundation of Rotary International’ எனும் அமைப்பு “Paul Harris Fellow” என்ற அங்கீகாரத்தை வழங்கி கௌரவப்படுத்தி வருகிறது.

1937 -38 -ம் ஆண்டில், முதல் முறையாக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த அங்கீகாரம் யார் யாருக்கு வழங்கப்படும்?

ரோட்டரி குழமத்துக்கு 1000 டாலர்களுக்கு அதிகமாக நன்கொடை அளிக்கும் நபர்களுக்கு வழங்கப்படும் கௌரவம் இது.

ஆண்டு நிதியாக நீங்கள் ஆயிரம் அமெரிக்க டாலர்களை ரோட்டரி நிர்வாகத்துக்கு சேவையாக அளிக்கும்பட்சத்தில், உங்கள் சேவை மனப்பான்மையைப் பாராட்டி, உங்களுக்கு இந்த விருதை ரோட்டரி சங்கம் வழங்கும்.

இப்படி இந்த அங்கீகாரத்தை ஒருவர் பெறவும் செய்யலாம், ஒருவர் மற்றொருவருக்காக வழங்கவும் செய்யலாம்.

இது தவிர, ரோட்டரி சங்கம் நினைத்தாலும், யாருக்கும் வேண்டுமானாலும் இந்த விருதை வழங்கலாம்.

அதாவது, நாமும் நன்கொடை அளித்து பெறலாம். ரோட்டரியே நமக்கும் தரலாம்.

ரோட்டரி இன்டர்நேஷனலின் நிறுவனர் பால் ஹாரிஸ் எடுத்துக்காட்டுகின்ற சிறந்த தொழிற்பண்பும் தனிப்பட்ட மதிப்பீடுகளும் உடைய நபர்களுக்கு ரோட்டரி கிளப்புகள் இந்த கௌரவத்தை வழங்கலாம்.

இது எந்தவொரு நிதி பங்களிப்பும் இல்லாமல் வழங்கப்படுகிறது.

இந்த அடிப்படையிலும் நன்கொடை அளிக்காத சிலருக்கும் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது.

உலக அளவில் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர், இந்த கௌரவத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

2006 -ம் ஆண்டிலே 10 லட்சம் என்னும் எண்ணிக்கையை கடந்திருக்கிறது இந்த PAUL HARRIS FELLOW அங்கீகாரம்.

2005ம் ஆண்டு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களும் ̀ PAUL HARRIS FELLOW அங்கீகாரத்தை பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் தற்போது `குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு போன்ற துறைகளில் சிறப்பாக பணியாற்றியதாக தமிழக முதல்வர் பழனிசாமிக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே