சென்னை எழும்பூர் – திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!

சென்னையில் இருந்து திருச்சி, தஞ்சை, கொல்லம் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே தெரிவித்திருப்பதாவது, சென்னை எழும்பூரில் இருந்து அக்.25ஆம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 8.45 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

கொல்லத்தில் இருந்து அக்.26ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் 3.05 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

இதேபோல் சென்னை எழும்பூரில் இருந்து அக்.27ஆம் தேதி இரவு 11.15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 4.45 மணிக்கு திருச்சி சென்றடையும்.

திருச்சியில் இருந்து அக்.26ஆம் தேதி இரவு 10.45 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்குகிறது. 

இவ்வாறு அதில் கூறியுள்ளது.

இதனிடையே சென்னை எழும்பூர்-தஞ்சாவூர் இடையேயும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே