மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தம்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வை, 2021 ஜூலை வரை நிறுத்தி வைப்பதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு, 2021 ஜூலை 1 வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.

இதனால், 48.34 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65.26 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பாதிக்கப்படுவார்கள்.

இதன் மூலம் ஒன்றரை ஆண்டுகளுக்கு அகவிலைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்காது.

அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டாலும், அகவிலைப்படி தொடர்ந்து வழங்கப்படும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதனால், 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பாதிக்கப்படுவார்கள்.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில், சுகாதாரத்துறைக்கு அதிக பணம் தேவைப்படுவதாலும், சமூகத்தில் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் நபர்கள் மற்றும் ஏழைகளின் நலத்திட்டங்கள் தேவைப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு, 2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூலை வரையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது.

2021 ஜூலை முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 2021 மார்ச் வரை மத்திய அரசுக்கு 27 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே