நடிகர் விஜய் குறித்து, அவரது தந்தை தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், குறிப்பிட்ட கருத்துக்களைப் பதிவிட்டு #SACexposesVijayMafia என்ற ஹேஷ் டேக் டிரெண்டாகி வருகிறது.

நடிகர் விஜயின் தந்தை கடந்த சில நாட்களுக்கு முன் அரசியல் கட்சி துவங்கியுள்ளதாகச் செய்திகள் வெளியானது.

இந்நிலையில், நடிகர் விஜய் தரப்பில் என் தந்தை துவங்கியுள்ள அரசியல் கட்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

அவர் என் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

எனவே எஸ்.ஏ சந்திரசேகர் விஜய் குறித்துப் பல கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். இந்நிலையில், அவர் நியூஸ்7க்கு அளித்துள்ள பேட்டியில், ” சமூகவலைத்தளங்களில் இருக்கும் 150 பேர், நடிகர் விஜயிடம், அப்பா உங்களை டேமேஜ் செய்துவிட்டார் என்று காலையில், தெரிவித்துவிடுவர்.

அது காலையில் வந்ததும் 100 பேர் லைக் செய்வார்கள். அந்த செய்தி உண்மை போல் இருக்கிறது என்று விஜய்யும் நம்பிவிடுவார்.

சாமர்த்தியமான அரசியலைவிட மோசமான ஒன்று நடந்து கொண்டிருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த கருத்து மற்றும் விஜய், எஸ்.ஏ. சந்திரசேகர் இடையிலான மோதலை சுட்டிக்காட்டி சமூகவலைத்தளத்தில் #SACexposesVijayMafia என்ற ஹேஷ் டேக் டிரெண்டாகி வருகிறது.

விஜய் ஆதரவாளர்கள் எஸ்ஏ சந்திரசேகரையும், எஸ்ஏ சந்திரசேகர் ஆதரவாளர்கள் விஜய்யையும் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

இது தொடர்பான வீடியோக்கள் மீம்ஸ்கள் தொடர்ந்து வைரலாகி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே