கொரோனா வைரஸ் குறித்து எச்சரித்த மருத்துவர் மரணம்..

சீனாவில் கொரோனோ வைரஸ் குறித்து முதல் முதலாக எச்சரிக்கைவிடுத்த சீன மருத்துவர் லீ வென்லியாங் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

உலகம் முழுவதும் பேரச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸால் சீனாவில் மட்டும் சுமார் 23,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி சீன மருத்துவர் லீ வென்லியாங், சக மருத்துவர்களின் கொரோனா வைரஸ் குறித்து எச்சரிக்கைவிடுத்தார்.

ஒரு சமூக வலைதளத்தில் அவர் குறுஞ்செய்தி அனுப்பினார்.

அப்போது அவரது கூற்றை யாரும் நம்பவில்லை. மேலும், தவறான செய்தியை பரப்பியதாக சீன காவல்துறையினர் அவருக்கு சம்மன் அனுப்பினர்.

அதனையடுத்து, ஜனவரி மாதத்தின் பிற்பாதியில் கொரோனா வைரஸின் தாக்கம் வெளியே வரத் தொடங்கியது.

பின்னர், சீனா கொரோனா வைரஸ் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

பின்னர், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்துவரும் மருத்துவராக லீ வென்லியாங் இருந்தார்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவருக்கு கொரோனா வைரஸின் தாக்கம் இருந்தது தெரியவந்தது.

அதனையடுத்து, தொடர் சிகிச்சையில் இருந்த அவர், சிகிச்சைப் பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே