தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ. 189.38 கோடிக்கு மது விற்பனை..!!

இன்று முழு ஊரடங்கு என்பதால் தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.

அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.44.55 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து திருச்சி மண்டலத்தில் ரூ.41.67 கோடிக்கும், சேலத்தில் ரூ.41.20 கோடி, கோவையில் ரூ.39.45 கோடி, சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் ரூ.22.56 கோடிக்கும் மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை 6-ம் கட்ட ஊரடங்கு தற்போது அமலில் இருக்கிறது. மேலும் ஊரடங்கில் 3ம் கட்டமாக சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.

இந்த காலக்கட்டத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதில் அத்தியாவசிய சேவைகளான மருத்துவமனைகள், மருந்தகங்கள், பால் நிலையங்கள், ஆம்புலன்சுகள், அமரர் ஊர்திகள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில சேவைகளுக்கு மட்டுமே இயங்குவதற்கு இன்றைய தினம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முழு ஊரடங்கு என்பதால் தமிழகம் முழுவதும் நேற்று மது விற்பனை அதிகரித்து உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே