கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோசை, முதல் டோஸ் போட்டுக்கொண்டதில் இருந்து ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் போட்டுக் கொண்டால் போதும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கோவிஷீல்டு, கோவாக்சின் என இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் நாடு தழுவிய தடுப்பூசி திட்டம் நடைபெற்று வருகிறது.

இவற்றில், கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோசை, முதல் டோஸ் போட்டுக்கொண்டதில் இருந்து ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் போட்டுக் கொண்டால் போதும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில், கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோசை போட்ட பின், 4 முதல் 6 வாரங்களில் இரண்டாவது டோசை போட வேண்டும் என்ற நிலையான வழிகாட்டல் அமலில் உள்ளதாகவும்; இந்த நிலையில், இதை மாற்றி, இரண்டாவது டோசை 6 முதல் எட்டு வாரங்களுக்குள் போட்டால் போதுமானது என மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கோவிஷீல்டின் இரண்டாவது டோசுக்கான கால இடைவெளியை இந்த அளவுக்கு நீட்டலாம் என மத்திய அரசின் தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவும், தடுப்பூசி நிர்வாக தேசிய நிபுணர் குழுவும் பரிந்துரைத்தன.

எனவே, எனவே முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்கள் அன்றிலிருந்து 42 நாட்கள் முதல் 56 நாட்களுக்குள் இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளலாம்.

அதே சமயம் மற்றோர் தடுப்பூசியான கோவாக்சினுக்கு இந்த மாற்றம் பொருந்தாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே