தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டால் நம் உடலில் இந்த மாற்றங்கள் வருமாம்…

தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவது ஏராளமான நன்மைகளை தருவதாக நிரூபிக்கப்பட்டு உள்ளது. வெள்ளரிக்காய் மலச்சிக்கல் முதல் புற்றுநோய் வரை எதிர்த்து போராடும் ஆற்றல் வாய்ந்தது…
கோடைகாலம் வந்துவிட்டாலே வெள்ளரிக்காய் சீசன் களைகட்ட ஆரம்பித்து விடும். அதிக நீர்ச்சத்து உள்ள இந்த காயை விரும்பாதவர்கள் என்று யாரும் கிடையாது. வெள்ளரிக்காயை நீங்கள் தவறாமல் சாப்பிட்டுவர சிறந்த காரணங்கள் நிறையவே உள்ளது. வெள்ளரிக்காய் ஒரு காய் அல்ல அது ஒரு பழம். வெள்ளரிக்காயில் நிறைய ஊட்டச்சத்துக்களும், நீர்ச்சத்தும் நிறைந்து காணப்படுகிறது. இதனால் இது சரியான நீரேற்றத்திற்கும் எடை இழப்பிற்கும் உதவியாக இருக்கும்.
ஒவ்வொரு நாளும் வெள்ளரிக்காயை சாப்பிடுவது உங்களை புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்கள் ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பை அளிக்கிறது.

நீங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு வெள்ளரிக்காய் வீதம் சாப்பிட்டு வருவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் இதோ உங்களுக்காக.
​நோயிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது
வெள்ளரிக்காயில் ஏராளமான ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. நாள்பட்ட நோய் மற்றும் முன்கூட்டிய வயதாகுவது போன்ற சிக்கல்களை களைகிறது. அவை செல்கள் சேதமடைவதை தடுக்கிறது. தீவிர சேதம் இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சினைகள், புற்றுநோய் மற்றும் தன்னுடல் தாக்க நோய் ஆகியவற்றை எதிர்த்து போராட நமக்கு உதவுகிறது.

நீங்கள் தினசரி வெள்ளரிக்காய் சாப்பிடும்போது, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், குறிப்பாக சக்திவாய்ந்த ஃபிளாவனாய்டு மற்றும் டானின் வகைகளை நீங்கள் பெற முடியும். 30 வயதை அடைந்தவர்களுக்கு வெள்ளரிக்காய் பொடியை கொடுத்து ஆய்வு நடத்தினர். இந்த ஆய்விலிருந்து அவர்களின் ஆன்டி ஆக்ஸிடன்கள் தன்மை அதிகரித்து இருப்பதும் இதன் மூலம் அவர்களால் நோய்களை எதிர்த்து போராட முடியும் என்பதும் தெரிய வந்துள்ளது.

​நீர்ச்சத்து
நம்மில் பெரும்பாலனோர் ஒவ்வொரு நாளும் போதுமான தண்ணீரை குடிப்பதில்லை. குறிப்பாக நாம் வேலையில் பிஸியாக இருக்கும் போது தண்ணீர் எடுத்துக் கொள்வதையே மறந்து விடுகிறோம். நீர் நம் உடலுக்கு அவசியமான ஒன்று. இது தான் வெப்பநிலை கட்டுப்பாடு, வளர்சிதை மாற்றம், உடல் செயல்திறன் மற்றும் கழிவுகளை அகற்றுவதில் நீர் முக்கிய பங்கு வகிக்கிறது. நாள்பட்ட குறைந்த அளவிலான நீரிழப்பு உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை தீவிரமாக பாதிக்கும்.

வெள்ளரி போன்ற நீர் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உங்கள் உணவில் அதிக தண்ணீரைப் பெறலாம். அனைத்து பழங்கள் மற்றும் காய்கறிகளில் கணிசமான அளவு தண்ணீர் உள்ளது. அதுவே வெள்ளரிக்காயில் 96 %தண்ணீர் சத்து காணப்படுகிறது. இது உங்க நீரேற்று தேவையை பூர்த்தி செய்ய உதவும். உங்கள் அன்றாட நீரேற்றம் தேவைகளில் 40% வரை உணவில் இருந்து பெறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது.எனவே தினந்தோறும் ஒரு வெள்ளரிக்காய் என சாப்பிட்டு வாருங்கள்.

​எடை இழப்பு
வெள்ளரிக்காய் உங்க எடை இழப்பை சாத்தியம் ஆக்குகிறது. நீங்கள் சர்க்கரை அளவை எடுத்துக் கொள்வதை குறைக்கிறது. இவற்றில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளது. இதனால் வெள்ளரி சாப்பிடுவது பசியை தணிக்கும்.

நீங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு முழு வெள்ளரிக்காயை சாப்பிட்டால் நீங்கள் 45 கலோரிகளை மட்டுமே எடுத்துக்கொள்வீர்கள் (மற்றும் கொழுப்பு இல்லை). புரதம், வைட்டமின் சி, வைட்டமின் கே, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு ஆகிய சத்துக்களையும் பெற முடியும்.அதிக நீர் நிறைந்த உணவைக் கொண்ட உணவை உட்கொள்வது உடல் நிறை கணிசமாகக் குறைக்கப்படுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

​​இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது
டயாபெட்டீஸ் நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவு கூடுகிறது. நாள்பட்ட உயர் இரத்த சர்க்கரை அளவு உடலில் நம்பமுடியாத அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. நோயை உருவாக்கும் ஆபத்தை அதிகரிக்கிறது. இதை ப்ரீடயாபெட்டீஸ் என்கின்றனர். இப்படி உடலில் சர்க்கரை அளவில் மாற்றம் ஏற்படுவது நிறைய மக்களுக்கு தெரிவதில்லை.

விலங்குகள் மற்றும் சோதனைக் குழாய்களில் பல ஆய்வுகள் வெள்ளரிகள் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும் மற்றும் நீரிழிவு நோயிலிருந்து பாதுகாக்கும் திறனைக் கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகின்றன. ஒரு விலங்கு ஆய்வு இரத்த சர்க்கரை அளவுகளில் பல்வேறு தாவரங்களின் விளைவுகளைப் பார்த்தது அப்போது வெள்ளரிகள் இரத்த சர்க்கரை அளவை குறைப்பது கண்டறியப்பட்டன. மற்றொரு விலங்கு ஆய்வில் வெள்ளரி சாறு எலிகளில் நீரிழிவு தொடர்பான மாற்றங்களை மாற்றியமைக்கும் என்று முடிவு செய்யப்பட்டது.

​ஒழுங்கான குடல் செயல்பாடு
நிறைய பேருக்கு காலையில் எழுந்ததும் மலச்சிக்கல் ஒரு பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. மன அழுத்தம், நீரிழப்பு மற்றும் மோசமான உணவு உள்ளிட்ட பல விஷயங்கள் மலச்சிக்கலை ஏற்படுத்துகின்றன. தினசரி வெள்ளரிக்காய் சாப்பிடுவது உங்க மலச்சிக்கலை போக்குமாம். அதில் நிறைய தண்ணீர் உள்ளது, இது மலத்தை மென்மையாக்கவும், எளிதில் வெளியேற்றவும் உதவுகிறது.

வெள்ளரிகளில் குறிப்பிட்ட வகை பெக்டின் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இந்த பெக்டின் மலத்தை இலகுவாக்குகிறது. குடல் தசைகளின் இயக்கத்தை விரைவுபடுத்துகிறது. செரிமானத்தை அதிகரிக்க குடலில் வாழும் நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கிறது.

வெள்ளரியில் சத்தான கொழுப்பு இல்லாத நார்ச்சத்துகள் அதிகம். எனவே வெள்ளரிக்காய் சூப், சாலட் போன்ற உணவுகளில் கலந்து சாப்பிட்டு வரலாம். இது உங்க மலச்சிக்கலை களைய உதவி செய்யும்.

ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு வெள்ளரிக்காயை சாப்பிடுவது சில குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளை உங்களுக்கு வழங்குகிறது. தொடக்கநிலையாளர்களுக்கும், நீரேற்றத்தை சமநிலைப்படுத்துவதற்கும், செரிமான ஒழுங்குமுறையை அடைவதற்கும், இரத்த சர்க்கரையை குறைப்பதற்கும், புற்றுநோய் உள்ளிட்ட சில நோய்களை உருவாக்கும் அபாயத்தை குறைப்பதற்கும் வெள்ளரிகள் உதவுகின்றன. எனவே நாள்தோறும் ஒரு வெள்ளரியை சாப்பிட்டு நோயில்லாமல் வாழலாம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே