செஸ் வரியை கைவிட்டால், நாங்கள் ஜிஎஸ்டிக்குள் வருகிறோம் – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

பெட்ரோல், டீசல் மீதான, மாநில அரசுகளுக்கு பகிர்ந்து கொடுக்காத மேல் வரி விதிப்பை மத்திய அரசு கைவிடுமானால், ஜிஎஸ்டி முறையின் கீழ் பெட்ரோல், டீசலை கொண்டுவருவற்கு ஆட்சேபணை இருக்காது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் 250 புதிய தள்ளு வண்டிகளை வழங்கிய அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

“பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டியின் கீழ் கொண்டு வரும் நிலைப்பாட்டை திமுக மாற்றிக்கொண்டதா?” என முன்னாள் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுப்பிய கேள்விக்கு நிதி அமைச்சர் பதில் அளித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே