என் மாப்பிள்ளையின் ஜாதி பற்றி கேட்க மாட்டேன்- கமல்

மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களை ஆதரத்து கட்சியின் ஒருங்கிணைப்பளர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்துகொண்டே, தனது தொகுதியான கோவைதெற்கு தொகுதியிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கோவை புலியகுளம் பகுதியில் பிரச்சாரம் செய்து வந்த கமல், ”இடஒதுக்கீட்டின் மூலமாக சாதி வெறிஅதிகரிக்கிறது. அதனால், சாதியை ஒழிக்க வேண்டும் .

சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் இட ஒதுக்கீட்டை ஒதுக்கித்தள்ள வேண்டும். அவரவர் தகுதிக்கு ஏற்ப அவரவர் முயசிகளுக்கு ஏற்ப வாழ்வில் அந்தந்த துறையில் முன்னேற வேண்டும் என்று தெரிவித்தார்.

அவர் மேலும், குறைந்த மதிப்பெண் கிடைத்தாலும் இட ஒதுக்கீட்டினால் சீட் கிடைத்திவிடும் என்ற குறுகிய வட்டத்திற்குள் மாணவர்கள் வாழக்கூடாது. 

தங்களின் தகுதியை இளையோர் கூட்டம் தாங்களே வளர்த்துக்கொள்ள வெண்டும் என்றும் தெரிவித்த கமல், இட ஒதுக்கீடு என்ற பேச்சுக்கே இடம் இருக்க கூடாது.

ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது என்ன ஜாதி என இருவும் விசாரிக்க கூடாது. சகோதரர்கள் என்ற நிலைப்பாட்டினை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும், என் வீட்டுக்கு வரும் மாப்பிள்ளையிடம் நீ என்ன ஜாதி என்று கேட்க மாட்டேன் என்றும் தெரிவித்தார் கமல்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே