களத்தில் உரையாடல் செய்தோம், அவருக்கு ஆட்டம் பற்றிய புரிதல் இருந்தது. பந்தை நன்றாக அடிப்பதாக அவர் உணர்ந்திருந்தார், அதனால் தொடர்ந்து ரிஸ்க் எடுத்து ஆடினார். ஆனால் தாறுமாறாகவெல்லாம் அவர் அடிக்கவில்லை, கணக்கிட்டுத்தான் அடித்தார். இதைத்தான் இளைஞர்களிடம் காண விரும்புகிறோம்.
அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் ‘புதிய இந்திய அணி’யின் அதிரடி பாசறையில் இன்னொரு புது முக அதிரடி வீரர் இணைந்துள்ளார். ஆம்! இஷான் கிஷன் முதல் போட்டியில் ஆடுவது போல ஆடாமல் அதிரடியாக ஆடி ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
ரஷீத்தை அடுத்தடுத்து சிக்சர்கள் விளாசினார், டாம் கரன் வந்தவுடன் லாங் ஆனில் ஒரு சிக்சருடன் வரவேற்றார், ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய போதும் இஷான் கிஷன் அச்சமற்ற கிரிக்கெட்டை வெளிப்படுத்தினார்.
இஷானும், கோலியும் சேர்ந்து 10 ஓவர்களில் 94 ரன்கள் விளாசியது இங்கிலாந்துக்கு வாய்ப்பே இல்லாமல் செய்து விட்டது. அறிமுக போட்டியில் அரைசதம் கண்டு ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார், எதிர்முனையில் கேப்டன் கோலி தொடர்ந்து அவரை உற்சாகமூட்டியபடியே இருந்தார்.
இந்நிலையில் விராட் கோலி கூறியதாவது:
இஷான் கிஷன் பேட் செய்த விதம் பற்றி சிறப்பாக குறிப்பிட வேண்டும். ஆட்டத்தை முற்றிலும் மாற்றி விட்டார். ரன் எடுக்காமலே ஒரு விக்கெட்டை இழந்தோம், நான் ஒரு முனையில் என்னால் முடிந்ததைத்தான் செய்து கொண்டிருந்தேன். ஆனால் எதிரணியிடமிருந்து முற்றிலும் ஆட்டத்தை இஷான் கிஷான் பறித்துச் சென்று விட்டார்.
தன்னுடைய இயல்பூக்க உணர்வுக்கேற்ப ஆடினார், அறிமுகப் போட்டியிலேயே தரமான பேட்டிங்கை ஆடினார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் தரமான சர்வதேச பவுலர்களையெல்லாம் இஷான் கிஷன் அடித்து நொறுக்குவதைப் பார்த்திருக்கிறோம். அவர் ஒரு பயமற்ற கிரிக்கெட்டர். அவர் தொடர்ந்து இயல்பாக ஆட வேண்டும்.
களத்தில் உரையாடல் செய்தோம், அவருக்கு ஆட்டம் பற்றிய புரிதல் இருந்தது. பந்தை நன்றாக அடிப்பதாக அவர் உணர்ந்திருந்தார், அதனால் தொடர்ந்து ரிஸ்க் எடுத்து ஆடினார். ஆனால் தாறுமாறாகவெல்லாம் அவர் அடிக்கவில்லை, கணக்கிட்டுத்தான் அடித்தார். இதைத்தான் இளைஞர்களிடம் காண விரும்புகிறோம்.
களத்தில் இறங்கி நிதானமாக அவதானித்து எதிர்த்தாக்குதல் நடத்தும் வேளையிலும் சூழ்நிலையையும் கவனத்தில் கொள்கின்றனர். இன்று அவரது எதிர்த்தாக்குதல் இன்னிங்ஸும் என்னுடனான 94 ரன்கள் கூட்டணியும் அணிக்குத் தேவைப்பட்டது. இதை அவர் இன்று அளித்தார்.
இவ்வாறு கூறினார் விராட் கோலி. இஷான் கிஷன் 32 பந்துகளில் 5 பவுண்டரிகல் 4 சிக்சர்களுடன் 56 ரன்கள் எடுத்து ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று எல்.பி.ஆனார்.