கே.பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரஜினிகாந்த். இந்த திரைப்படம் 1974-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியானது.
இந்நிலையில் அந்த திரைப்படம் வெளியாகி 45 ஆண்டுகளாவதையொட்டி ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அபூர்வராகம் திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தாலும், அதன்பிறகு வில்லனாக நடித்து ஹீரோவாக உயர்ந்தவர் ரஜனிகாந்த்.
மேலும் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவருடைய ட்விட்டர் பக்கத்தில், “என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி.
#நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

