கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட மருத்துவமனை ஊழியர் உயிரிழப்பு..??

உத்தரபிரதேச மொராதாபாத்தில் கோவிஷீல்ட் தடுப்பூசி போடப்பட்ட மருத்துவமனை ஊழியர் நேற்று மாலை உயிரிழந்தார்.

இந்நிலையில், உயிரிழந்த மருத்துவமனை ஊழியர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான கோவிஷீல்ட் தடுப்பூசியை அவர் இறப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு பெற்றிருந்தார் என தெரியவந்ததுள்ளது.

ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில் மஹிபால் சிங் இறந்ததற்கு காரணம் மாரடைப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி போடப்பட்டதினால் உயிரிழக்கவில்லை என சி.எம்.ஓ தெரிவிகப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த இரண்டு நாட்களில் இந்தியா இதுவரை 70.89 சதவீத தடுப்பூசி போட்டுள்ளது.

மொத்தம் 316,375 பயனாளிகளில், 224,301 பேர் இந்தியாவில் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே