வரும் 21ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

திமுக,அதிமுக,மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன.

இந்நிலையில் வரும் 21ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் .

மேலும் கட்சி ஆக்கப் பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும் அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே