நெல்லை சாஃப்டர் பள்ளிக்கு நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் இடைவேளையின்போது மாணவர்கள் சிறுநீர் கழிக்கச் சென்றபோது, கழிப்பறை கட்டடத்தின் முன்பக்க சுவர் இடிந்து விழுந்ததில் 7 மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

இதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த 4 மாணவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 4 பேரும் நலமாக உள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சாஃப்டர் பள்ளிக்கு நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவித்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளி கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளவிருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே