ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவர் சைபுல்லா மிர் சுட்டுக்கொலை..!!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரங்கிரெத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஹிஸ்புல் முஜாஹிதீனின் தலைவர் சைபுல்லா மிர் கொல்லப்பட்டார்.

ஹிஸ்புல் முஜாஹிதீனின் செயல்பாட்டுத் தலைவர் டாக்டர் சைபுல்லா மிர் பிற்பகல் ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள ரங்கிரெத்தில் போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார்.

இவரது கூட்டாளிகளில் ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆகஸ்ட் 2014 இல் , டாக்டர் சைபுல்லா மிர் இந்த இயக்கத்தில் சேர்ந்தார் . பாதுகாப்பு படையினருடனான மோதலில் ரியாஸ் நாய்கூ கொல்லப்பட்ட பின்னர் கடந்த மே மாதத்தில் அவர் புதிய ஹிஸ்புல் தலைவராக நியமிக்கப்பட்டார் .

ஹிஸ்புல் முஜாஹிதீன் எனும் பிரிவினைவாத போராளிக்குழு , ஜம்மு – காஷ்மீர் பிராந்தியத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது .


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே