பொடுகு தொல்லை நீங்க சில வழிகள்..!!

  • தலையில் பசலை கீரையை அரைத்து தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லை சரியாகும். அதேப்போல் தேங்காய் எண்ணெய்யில் அருகம்புல் சாறு சேர்த்து காய்ச்சி, ஆறிய பின்பு தலையில் தேய்க்கலாம்.
  • 50 கிராம் காய்ந்த வேப்பம்பூ, 100 மில்லி தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து காய்ச்சி ஆறவைத்து அதை தலையில் தேய்த்துவிட்டு அரை மணி நேரம் கழித்து குளித்தால் பொடுகு சரியாகும்.
  • சின்ன வெங்காயத்தை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் தலை சூடு குறையும்.
  • தேங்காய் எண்ணெய்யில் வெந்தயத்தை போட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து குளிக்கலாம். அதேப்போல் தயிரில் பாசிப்பயிறு மாவு போட்டு கலந்து முடிக்கு தேய்த்து நன்கு ஊறவைத்த பின்பு குளிக்க வேண்டும்.
  • தலையில் வேர் பகுதிகளில் படும்படி காற்றாழை சாற்றை தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை சரியாகும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே