சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி வருகிறது.
தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்;
ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்பது சென்னை வானிலை மையத்தின் அறிவிப்பு.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்;
அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் என்றது சென்னை வானிலை மையம்.
இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மாலை முதல் இடியுடன் கூடிய கனமழை கொட்டி வருகிறது.
சென்னை அண்ணாசாலை, மீனம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை கொட்டியது.
இதனால் பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. போதுமான வடிகால் வசதிகள் இல்லாததால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்ற காட்சிகளையும் காண முடிந்தது.