பிரபல உருது கவிஞர் ரஹத் இந்தோரி கொரோனாவுக்கு பலி

ம.பி., மாநிலத்தை சேர்ந்த பிரபல உருது கவிஞர் ரஹத் இந்தோரி கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளார்.

ம.பி.,மாநிலத்தை சேர்ந்த பிரபல உருது கவிஞர் ரஹத் இந்தோரி. இவர் கடந்த 50 ஆண்டு காலமாக கவிதைகளை எழுதி வந்துள்ளார்.

கடந்த 1997 ம் ஆண்டு வெளிவந்த இஷ்க் படத்தில் இடம்பெற்ற ‘நீந்த் சுரை மீ’ என்ற பாடல் மற்றும் 2003ம் ஆண்டு வெளிவந்த முன்னாபாய் எம்.பி.பி.எஸ்-ல் இடம்பெற்ற எம் இ போல்டு , மூலம் வெளி உலகிற்கு தெரிய வந்தார்.

இந்தாண்டின் துவக்கத்தில் புலாட்டி ஹை மாகர் ஜோன் கா நஹி என்ற கவிதை சமூக ஊடகங்களில் வைரலாகி இளைஞர்களிடையே பரபரப்பை ஏற்டுத்தியது.

இதனிடையே அவர் இந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் பாசிட்டிவ் என உறுதிபடுத்தப்பட்டது.

தொடர்ந்து அவர் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில் நான் கொரோனா சோதனைக்காக அரவிந்தோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். இந்த நோயை விரைவில் தோற்கடிக்க பிரார்த்தனை செய்யுங்கள் என கூறி இருந்தார்.

இந்நிலையில் அவர் மரணம் அடைந்தார்.

இது குறித்து மருத்துவமனை அதிகாரி கூறுகையில் ரஹத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டது எனவும் அவருக்கு 60 சதவீதம் அளவிற்கு நிமோனியா காய்ச்சலும் இருந்தது. இதன்காரணமாக சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் என கூறினார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே