உலகின் நம்பர் 1 தேடுபொறி இணையதளமான கூகுள் தனது 21 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறது. இதையொட்டி கூகுள் தனது முகப்பு பக்கத்தில் அதற்கான லோகோவை வெளியிட்டுள்ளது.
1998ம் ஆண்டு, லாரி பேஜ், சேர்ஜி பிரின் ஆகியோரால் கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்டது, இன்றுடன் கூகுள் தொடங்கி 21 ஆண்டுகள் நிறைவடைந்துருகிறது. உலகில் மூன்றில் ஒருவர் கூகுள் இணையதளத்தை பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன, அதாவது சுமார் 250 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கூகுள் இணையதளத்தை தினசரி பயன்படுத்துகிறார்கள்.
ஆண்டுதோறும் சுமார் பல லட்சம் வேலைவாய்ப்புகள் கூகுள் நிறுவனம் மூலமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் கிடைத்து வருகிறது. மேலும் கூகுள் நிறுவனத்தை தலைமையாக கொண்டு, யூடியூப், ஜிமெயில், கூகுள் மேப்ஸ், ஆண்ட்ராய்டு, போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களையும் கூகுள் நடத்தி வருகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை என்பவர் தான் தற்போதைய கூகிள் நிறுவனத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.