கைகளை சுத்தம் செய்து கொண்ட முதல்வர் மற்றும் துணை முதல்வர் (VIDEO)

கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைமை செயலகம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைமுதல்வர் ஓ பன்னீர்செல்வத்திற்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது. 

தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைப்பெற்று வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தலைமை செயலகம் வரும் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அரசு ஊழியர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளுதல், கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பிரசுரம் வழங்குதல் மற்றும் கிருமிநாசினி கொண்டு கை கழுவும் முறை குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது. 

இந்நிலையில், இன்று தலைமை செயலகம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து கிருமி நாசினி கொண்டு கை கழுவினார்.

இதேபோல துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எதிர்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் உள்ளிட்டோரும் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்து வெப்பநிலையை பரிசோதனை செய்து கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே