குரூப்-4 தேர்வில் முறைகேடு..!

9 ஆயிரத்து 500 காலிப் பணியிடங்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற குரூப்-4 தேர்வை, 16 லட்சம் பேர் எழுதினர். 

இதன் முடிவுகள் வெளியிடப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து முடிந்துவிட்ட நிலையில், தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது.

ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை ஆகிய இரு இடங்களில் உள்ள மையங்களில் தேர்வு எழுதியவர்கள், முதல் 100 இடங்களில், 35 இடங்களைப் பெற்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது. 

வெளி மாவட்டங்களிலிருந்து ராமநாதபுரத்திற்கு சென்று,  குறிப்பிட்ட இரு மையங்களில் தேர்வு எழுதியவர்களில் 57 பேர்  தேர்வு பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த திருவராஜ் என்பவர், 300 மதிப்பெண்களுக்கு 290 மதிப்பெண்கள் பெற்று  முதலிடம் பிடித்தார். 

இந்த சூழலில் சர்ச்சைக்குரிய மையங்களில் தேர்வு எழுதி முதல் 35 இடங்களைப் பெற்ற அனைவரும், வரும் திங்கள் அன்று விசாரணைக்கு வருமாறு டிஎன்பிஎஸ்சி அழைப்பு விடுத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே