சென்னை வேளச்சேரி திரு.வி.க நகரைச் சேர்ந்தவர் லட்சுமி. இவரது மகன் மூர்த்து அடிக்கடி குடிபோதையில் தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். 

இந்நிலையில் நேற்றிரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தாயிடம் உணவு கேட்டுள்ளார்.

தினமும் குடிபோதையில் வருவதால் தாய் லட்சுமி, மூர்த்தியைக் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், அருகில் இருந்த கத்தியை எடுத்து தாயை சரமாறியாக மூர்த்து குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே லட்சுமி பறிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து மூர்த்தி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், தகவலறிந்து வந்த போலிஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய மூர்த்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே