கொரோனா பரிசோதனை செய்ததில் தனக்கு தொற்று இல்லை என ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் ட்வீட்

தெலங்கானா மாநிலத்தில் ஆளுநர் மாளிகையில் 10 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு சோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று தெரிய வந்துள்ளது.

தெலங்கானா ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்த காவலர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, ஆளுநர் தமிழிசை உட்பட அங்கு பணிபுரியும் அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், தமிழிசைக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரிய வந்துள்ளது. இதனை அவரே ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் ” நான் கொரோனா சோதனை செய்து கொண்டேன். எனக்கு நெகட்டிவ் வந்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சிகப்பு மண்டலங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தாமதம் செய்யாமல் உடனடியாக சோதனை செய்து கொள்ளுங்கள்” என வலியுறுத்தி உள்ளார்.

மேலும் தொற்று அறிகுறியின் தொடக்கத்திலே சோதனை செய்வதற்கு நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு மட்டுமல்ல, நம்மால் மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்கவும் தான். தயக்கம் கொள்ள வேண்டாம்.

உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள். சோதனை, தொடர்பை அறிதல், சிகிச்சை, விழிப்புணர்வு ஆகிய இந்த நான்கினை பின்பற்றுங்கள் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே