வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்..!!

மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் இருந்து வன்னியர்களுக்குப் பத்தரை விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவுக்குத் தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.

மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டை மூன்றாகப் பிரித்து வன்னியர்களுக்குப் பத்தரை விழுக்காடும், சீர்மரபினருக்கு 7 விழுக்காடும், மிகப் பிற்படுத்தப்பட்டோரில் பிற சமூகத்தினருக்கு இரண்டரை விழுக்காடும் வழங்குவதற்கான சட்ட முன்வடிவு வெள்ளியன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்ட முன்வடிவுக்குத் தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதையடுத்துத் தமிழகத்தில் கல்வி நிறுவனங்களிலும், மாநில அரசின் வேலை வாய்ப்புகளிலும் வன்னியர் சமூகத்தினருக்குப் பத்தரை விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே