இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்க விலை ஏற்ற இறக்கத்தை மாறி மாறி சந்தித்து வந்தது.
கடந்த மார்ச் மாதம் வரையில் ரூ.30 ஆயிரத்திலேயே நீடித்து வந்த தங்க விலை, பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்தது.
தங்கத்தின் வரத்து குறைந்ததாலும், பொருளாதார வீழ்ச்சியாலும் தங்க விலை குறைந்ததாக கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட ரூ.43 ஆயிரம் வரை உயர்ந்து வரலாறு காணாத ஏற்றத்தை கண்ட தங்க விலை, மேலும் உயரும் என பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
ஆனால் கடந்த சில நாட்களாக தங்க விலை சற்று குறைந்து வருகிறது.
இன்றைய நிலவரத்தின் படி தங்க விலை கிராமுக்கு ரூ.13 குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.4,924க்கு விற்பனையாகிறது. அதே போல சவரனுக்கு ரூ.104 குறைந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.39,392க்கு விற்பனையாகிறது.
மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.71க்கு விற்பனை செய்யப்படுகிறது.