2ம் நாளாக சற்று குறைந்த தங்கத்தின் விலை… சவரனுக்கு ரூ.216 குறைந்தது!!

சென்னையில் 2ம் நாளாக ஒரு சவரன் தங்கம் விலை ரூ.216 குறைந்துள்ளது. இதையடுத்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.42,864க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராமின் விலை ரூ. 27 குறைந்து ரூ.5,358 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் 43,000 த்தை தாண்டிய தங்கத்தின் விலை இன்று வார துவக்கத்திலேயே சற்று இறங்கியது வாடிக்கையாளர்களுக்கு மன நிம்மதியை அளித்துள்ளது.

இதுதவிர, சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி கிராமிற்கு ரூ.20 காசுகள் குறைந்து ரூ.82.63-க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த மாதம் 20ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.37,616க்கு விற்கப்பட்டது.

அதன் பிறகு தங்கம் விலை குறையாமல் தொடர்ச்சியாக உயர்ந்து வந்தது. கடந்த 1ம் தேதி தங்கம் ஒரு சவரன் 41,568க்கும், 3ம் தேதி 41,592, 4ம் தேதி 41,616, 5ம் தேதி 42,592க்கும் விற்கப்பட்டது.

தொடர்ச்சியாக 18வது நாளாக கடந்த 7-ம் தேதி ரூ.46 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5420க்கும், சவரனுக்கு ரூ.368 அதிகரித்து ஒரு சவரன் ரூ.43,360க்கும் விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்சம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அதாவது 8ம் தேதி தங்கத்தின் விலை சற்று குறைந்தது.சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.288 குறைந்து ஒரு சவரன் ரூ.43,040க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே