கேரளாவில் மே8 முதல் மே16 வரை முழு ஊரடங்கு..!!

கேரளாவில் கொரோனா 2 அலையை கட்டுப்படுத்த மே 8 முதல் மே-16 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

2வது அலையை கட்டுப்படுத்தவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரளாவில் நேற்று மட்டும் 41,953 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 58 பேர் உயிரிழந்துளனர். 23, 106 பேர் கொரோனாவிலிருந்து நலமடைந்துள்ளனர்.

நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவதால், முழு ஊரடங்கு மூலமாகவே தொற்றை கட்டுப்படுத்தலாம் என அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே