மக்கள் நீதி மய்யத்தின் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடும் 24 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

மக்கள் நீதி மய்யத்துடன் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும், இந்திய ஜனநாயக கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன.

அந்த இரண்டு கட்சிகளும் தலா 40 தொகுதிகளில் போட்டியிடும் என்றும், மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிடும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 10ம் தேதி தேர்தலில் மநீம கட்சியின் சார்பில் போட்டியிடும் 70 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியானது.

இதையடுத்து, கடந்த 12ம் தேதி 43 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடப்பட்டது. 

இந்நிலையில், தற்போது ஆயிரம் விளக்கு, ராயபுரம், திருவாரூர் உள்ளிட்ட 24 தொகுதிகளுக்கான மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கில் போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே