சென்னை சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையின் நிர்வாகிகள் மாற்ற உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் செல்போன் உதிரிபாக ஆலையில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த இடம் உரிய தரத்துடன் இல்லாதது அம்பலமானது அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருக்கிறது. அண்மையில் ஃபாக்ஸ்கான் ஊழியர்கள் தங்கி இருந்த இடத்தில் உணவு தரம் இல்லாததால் பல நூறு ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். ஊழியர்கள் பாதிக்கப்பட்டதை அடுத்து ஆயிரக்கணக்கானபெண் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஊழியர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த கல்லூரி கட்டிடத்தில் சுகாதார வசதி இல்லை என்பதும் போராட்டத்தில் அம்பலமானது. ஊழியர்கள் பணிக்கு வராததால் ஐபோன் உதிரி பாகங்கள் தயாரித்து வரும் ஃபாக்ஸ்கான் ஆலையில் பணிகள் முடங்கின. ஃபாக்ஸ்கான் ஊழியர்கள் தங்கியிருந்த இடத்தை ஆய்வு செய்வதற்கு அதிகாரிகளை அனுப்பி உள்ளதாக ஆப்பிள் நிறுவனத் தகவல்கள் வெளியாகி உள்ளது .
ஆப்பிள் நிறுவனம் விதித்துள்ள தரத்திற்கு ஏற்ப ஊழியர்கள் தங்குமிடத்தில் வசதி இல்லை என ஆய்வில் தகவல்.