மாதவிடாய் நேரத்தில் சாப்பிட மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்..!!

ஒவ்வொரு பெண்ணிற்கும் மாதவிடாய் என்பது மோசமான நாட்களாகவே உள்ளது. அந்த சமயங்களில், வலி, வீக்கம், பதற்றம், மனச்சோர்வு, முதுகுவலி போன்ற பல்வேறு பாதிப்புகளை அவர்கள் சந்திக்கின்றனர்.

இந்த பிரச்சனைகளை சமாளிப்பதற்கு பெண்கள் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும், என்னென்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று தற்போது பார்க்கலாம்.

சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

உப்பு:
உப்பில்லா பண்டம் குப்பையில் என்று சொல்வார்கள். ஆனால், அந்த சமயங்களில் மட்டும் உப்பு குறைவாக உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.

அதற்கான காரணம் என்னவென்றால், உப்பின் சோடியம் என்ற மூலப்பொருள் உள்ளது. இது உடலில் நீர்சத்தை குறைக்கும். இதனால், வயிற்று அதிகமாக ஏற்படும்.

காபி:
உப்பை போலவே, காபி பருகுவதையும் மாதவிடாய் நேரங்களில் தவிர்க்க வேண்டும்.

காபி பருகுவது மாதவிடாய் தொடர்பான மற்ற நோய்களுக்கும் காரணமாக இருப்பதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. எனவே, அந்த சமயங்களில் காபி குடிப்பதை தவிர்த்துவிடுங்கள்.

தண்ணீர்:
தண்ணீர் அதிகமான அளவில் குடிக்க வேண்டும். இது உடலில் நீர்சத்தை நிலைநிறுத்துவதற்கு உதவும்.

மேலும், தண்ணீர் குடித்தால், தேவையில்லாத கழிவுகளும், சிறுநீர் வழியாக வெளியே வந்துவிடும். எனவே, மாதவிடாய் காலங்களில் முடிந்த அளவிற்கு தண்ணீர் பருகி வாருங்கள்.

பொட்டாசியம் நிறைந்த உணவுகள்:
பொட்டாசியம் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இது உடலில் உள்ள சோடியத்தின் அளவை சமநிலையில் வைத்திருக்க உதவும்.

மேலும், வலியை குறைக்கவும் இது பயன்படும். பொட்டாசியம் அதிகம் நிறைந்த உணவுகள், காய்கறிகள், கீரை, வாழைப்பழம், தக்காளி போன்றவை ஆகும்.

பதப்படுத்தப்பட்ட சர்க்கரைகள்:
பதப்படுத்தப்பட்ட சர்க்கரைகளில் அதிக அளவில் கார்ப்போஹைட்ரேட் இருப்பதால், இதனை தவிர்ப்பது நல்லது.

கார்ப்போஹைட்ரேட் அதிகம் எடுத்துக் கொண்டால், சோடியத்தின் அளவும் அதிகரிக்கும். ஏற்கனவே கூறியது போல, சோடியம் மாதவிடாய் கால வலியை மேலும் அதிகரிக்கும். எனவே, பதப்படுத்தப்பட்ட சர்க்கரைகள், மாவு பொருட்களை தவிர்த்துவிடுங்கள்.

இந்த உணவுகள் சாப்பிடுவது மட்டுமின்றி, உடற்பயிற்சிகள் சிலவற்றையும் பெண்கள் மேற்கொள்ள வேண்டும்.

அசௌகரியமாக உள்ளது என்று தவிர்க்க வேண்டாம்.

அவ்வாறு செய்தால் தான் உடலுக்கு இதமாக இருக்கும். பெரிய உடற்பயிற்சிகள் செய்ய முடியவில்லையெனில், நடைபயிற்சியையாவது செய்ய முயற்சி செய்யுங்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே