மீனவர்கள் செல்ல வேண்டாம் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

தமிழகத்தின் 19 மாவட்டங்களில் லேசான, மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

இந்நிலையில்வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 19 மாவட்டங்களில் லேசான, மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

திருவள்ளூர், கோவை, தஞ்சை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல், வங்கக்கடல், அந்தமான் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 1860 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே