சிம்புவின் மாநாடு படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியானது..!!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

மாநாடு படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது.

சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், பாரதிராஜாவின் மகன் மனோஜ், பிக் பாஸ் டேனியல், ஒய்.ஜி. மகேந்திரன் போன்றோர் நடிக்கிறார்கள். இசை – யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம். நாதன்.

இப்படத்தில் முதல்முறையாக இஸ்லாமிய இளைஞராக, அப்துல் காலிக் என்கிற வேடத்தில் நடிக்கிறார் சிம்பு. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

திரைப்படப் படப்பிடிப்பை தொடங்க அரசு அனுமதித்த பிறகு, சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்கிற படத்தில் நடித்துள்ளார் சிம்பு. இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

ஒரு மாதத்துக்குள் ஈஸ்வரன் படப்பிடிப்பை முடித்துக்கொண்ட சிம்பு அடுத்ததாக மாநாடு படத்தின் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டுள்ளார்.

புதுச்சேரியில் மாநாடு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்த மாநாடு படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே