ரேஷன் கடைகளில் இன்று முதல் கைவிரல் ரேகை பதிவுமுறை மீண்டும் அமல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நிவாரணத் தொகை மற்றும் 14 மளிகைப் பொருட்கள் விநியோகத்தை முன்னிட்டு ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு முறை நிறுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மாத இறுதிக்குள் முழுவதுமாக விநியோகம் முடிக்கப்படும் நிலை உள்ளதால், கைவிரல் ரேகை பதிவுமுறை மீண்டும் இன்று அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய குடும்ப அட்டைக்கு ஒப்புதல் அளிக்கும் சேவையும் மீண்டும் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.