தமிழக அரசின் இலவச மின்சாரம் பெற ஓசூரில் மின்வாரிய அலுவலகம் முன் ஏராளமான விவசாயிகள் குவிந்தனர்.
தமிழக மின்வாரியத்தின் மூலமாக விவசாயிகளுக்கு தட்கல் முறையில் இலவசமாக மின் வினியோகம் வழங்கப்படுகிறது.
ஓசூர் மின்கூட்டத்தில் 350 விவசாயிகளுக்கு தட்கல் முறையில் இலவச மின்சாரம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இதில் 230 விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு வரை மின் இணைப்பு வழங்கப்பட்ட நிலையில், எஞ்சிய 120 மின் இணைப்பு வழங்க விவசாயிகளின் விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றது.
இதற்காக ஏராளமான விவசாயிகள் நேற்று முன்தினம் முதல் விடிய விடிய நீண்ட நேரம் காத்திருந்தனர்.
இதற்கிடையே, தங்களது சான்றுகளையும் சரிபார்க்க வேண்டும் என மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, அனைத்து விவசாயிகளின் விண்ணப்பங்களையும் பரிசீலனைக்கு அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.
எஞ்சிய 551 விவசாயிகளுக்கு வரும் மாதங்களில் மின் இணைப்பு வழங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.