உருவாகும் ஜமுனா பயோபிக்: தமன்னாவிடம் பேச்சுவார்த்தை

நடிகை ஜமுனா பயோபிக்கில் நடிப்பதற்கு தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 1950 – 1960களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜமுனா. தெலுங்கில் தான் அதிகமான படங்களில் நடித்துள்ளார். சுமார் 150-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். தனது 16 வயதிலேயே நாயகியாக அறிமுகமானவர் ஜமுனா என்பது நினைவு கூரத்தக்கது.

இவரும் நடிகை சாவித்திரியும் நெருங்கிய தோழிகளாக வலம் வந்தவர்கள். சாவித்திரி தான் இவரைத் திரையுலகிற்கு அழைத்து வந்தவர் என்ற தகவல் உண்டு. தற்போது ஜமுனாவை வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து படமொன்று உருவாகவுள்ளது.

இதில் ஜமுனாவாக நடிப்பதற்கு தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு.

அவரோ ஜமுனாவின் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொண்டு, இந்தப் படத்தில் நடிப்பதற்காக ஆர்வமாகத் தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் இயக்குநர், தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் அனைத்து விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ஜமுனா பிரபலமானவர் என்பதால் அனைத்து மொழிகளிலும் இந்தப் படத்தை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே