மின்வாரியத்தில் காலிப் பணியிடங்களை தனியார் மூலம் நிரப்ப மின்துறை உத்தரவு..!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவியாளர், வயர்மேன் பணியிடங்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் ஆட்கள் நியமனம் செய்யப்படும் என்றும்; 12,000 இடங்கள் தனியாருக்கு செல்கிறது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுபவர்கள் 3 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள்.

அரசின் தனியார்மய நடவடிக்கையால் இனி ஐ.டி.ஐ படித்தவர்கள் நேரடியாக மின்வாரியத்தின் வயர்மேன் பணியிடத்தில் சேர முடியாது என கூறியுள்ளது.

தனியாருக்கு செல்லும் மின்வாரிய பராமரிப்பு பணி – மின் விநியோகத்தில் தடங்கல் இன்றி பராமரிப்பு பணி மேற்கொள்ளவே தனியார் நிறுவனம் மூலம் பணியாளர் நியமனம் என அரசு விளக்கம் அளித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே