தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல், வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கு, வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இத்தேர்தலில் திமுக வேட்பாளர்களாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜூ, என். ஆர் இளங்கோ ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக தனது வேட்பாளர்களை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை தொடங்கியது.

வழக்கமாக அனைத்து தேர்தல்களிலும் வேட்புமனு தாக்கல் செய்வதை வழக்கமாக கொண்ட பத்மராஜன் முதல் ஆளாக சுயேச்சையாக 214வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு 13ஆம் தேதி கடைசி நாளாகும். ஞாயிற்று கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சட்ட பேரவை செயலாளரிடம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே