கொரோனா 2வது அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் – உயர்நீதிமன்றம் காட்டம்..!!

கொரோனா இரண்டாவது அலை பரவியதற்கு முழு காரணமே தேர்தல் ஆணையம் தான் என தலைமை நீதிபதி காட்டம் தெரிவித்துள்ளார்.

கரூரில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், அங்கு உரிய கொரோனா வழிகாட்டு நெறிமுறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பான மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையில், ” சமூக இடைவெளியின்று அரசியல் கட்சிகள் விரும்பும் போல் பிரச்சாரம் செய்ததால் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் உரிய கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படாத பட்சத்தில், வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும். 

தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரத்தால் கொரோனா அதிகரித்ததற்கு தேர்தல் ஆணையமும் காரணமாக இருக்கிறது.

பிரச்சாரம் நடக்கையில் தேர்தல் அதிகாரிகள் வேற்றுகிரகத்தில் இருந்தார்களா?. தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக்குற்றம் சுமத்தினாலும் தவறே கிடையாது.

கொரோன தடுப்பு நடவடிக்கை குறித்து சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் தேர்தல் அதிகாரி ஆலோசனை மேற்கொண்டு, ஏப்ரல் 30 ஆம் தேதி பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் ” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே