வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக வரும் நவம்பர் 3ம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு ஆலோசனை நடத்தவுள்ளார்.

வரும் நவம்பர் 16-ந்தேதியன்று ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும், டிசம்பர் 15-ந்தேதிக்கு முன்னதாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும் தகுதியுடைய வாக்காளர்கள் அதற்கான விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

ஜனவரி 20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நவம்பர் 3 ஆம் தேதி அங்கீகரிக்கட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தங்களது பரிந்துரைகளை அளிக்கவுள்ளனர்.

குறிப்பாக இரட்டை பதிவுகளை நீக்குவது, வாக்குச்சாவடி முகவர்களுக்கு தேவையான வசதிகள் செய்வது தொடர்பான கோரிக்கைகளை முன்வைப்பார்கள் என தெரிகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே