சென்னையில் கொளுத்தும் வெயிலிலும் தீவிரபிரச்சாரம் செய்து வரும் நிலையில் வேட்பாளர்களுக்கு மத்தியில் எழும்பூர் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஜான்பாண்டியனிடம் வழியும் வியர்வையை தனியாக ஆள் வைத்து துடைத்தவாறு ஓட்டு சேகரித்து வருகின்றார்

பங்குனி வெயில் படுத்தி எடுப்பதால் கொளுத்தும் வெயிலில் பிரச்சாரம் மேற்கொள்ளும் வேட்பாளர்கள் எளிதாக சோர்வடைந்து விடுகின்றனர்.

இருந்தாலும் ஓட்டு கையை விட்டு போய்விடக்கூடாது என்று வெயிலை பொருட்படுத்தாமல் வீதி வீதியாக ஆதரவாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கிடையே எழும்பூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளரான தமிழக மக்கள் முன்னேற்றகழக தலைவர் ஜான்பாண்டியன், வெயிலை சமாளிக்க புதிய ஏற்பாடு ஒன்றை செய்துள்ளார்.

அதன் படி வீதியில் இறங்கி வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் போது தன்னிடம் வழியும் வியர்வை துளியை துடைப்பதற்கு என்றே பிரத்யேகமாக ஒரு ஆளை வைத்துள்ளார்.

இரு கைகளிலும் வெள்ளை துணியை மடித்து வைத்துக் கொண்டு வேட்பாளர் ஜான்பாண்டியனுடன் செல்லும் அந்த நபர் , ஜான் பாண்டியன் தலையில் தோன்றும் வியர்வை துளியை அவ்வப்போது துடைத்து விடுகிறார்

அதே போல அவரை சுற்றி எப்போதும் 4 பாதுக்காவலர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தலையை துடைத்து விட பணியாள் என கெத்தாக ஜாண்பாண்டியன் வாக்கு சேகரித்து வருகின்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே